தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மீசாலையில் கோர விபத்து!

யாழ். மீசாலையில் நடந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதிகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் மீது ஏறியுள்ளது.

இதனால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மீசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
Loading...