தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் இன்று 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாசு குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் கடத்தி வருகின்றார். இது தொடர்பாக முருகன் கடந்த 31ஆம் திகதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்.

அல்லது கருணை கொலை செய்யுங்கள். இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள்’ என கூறியுள்ளார். அத்துடன், அவர் கடந்த 2ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
Loading...