தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை..

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமழக அரசின் இந்த முடிவு குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இதன்போது  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...