தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களிற்காக குரல்கொடுத்துள்ள சத்யராஜ்….

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர் என்பதோடு, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கும்  தற்போது இவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் 7 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அறிக்கை அனுப்பி வைத்த நிலையில்,  ஆளுநர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில்  28 வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய கோரி பேரறிவாளரின் தாயார் அற்புதம்மா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில்  அவருக்கு நாம் உறுதுணையாக  நிற்போம் என  நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...