தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராமேஸ்வரம் அருகே மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள இலங்கை படகு..

ராமேஸ்வரம் அருகே இலங்கை படகு மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

ராமேஸ்வரம் அருகே சேராங்கொட்டை கடற் கரைப் பகுதியில் ராமேஸ்வரம் இந்திய கடற்படை முகாம் அருகே 500 மீட்டர் தொலைவில் மர்மமான முறையில் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த படகு கரை ஒதுங்கியுள்ளது.

இந்த படகில் இயந்திரம் மற்றும் மீன்பிடி வலைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அதிகாலை மூன்று மணியளவில் படகில் இருந்த மூன்று பேர் இறங்கி  சென்றதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  படகிலிருந்துவந்தவர்கள் கடத்தல் பொருட்கள் கொண்டு சென்றனரா  அல்லது அகதிகளை ஏற்றிச்செல்ல வந்தவர்களா என்பது குறித்து  பாதுகாப்பு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...