தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரெஜினோல்ட் குரேக்கு புதிய பதவி…

வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்.

வட  மாகாணத்தின் ஆளுநராக பல வருடங்களாகச் செயற்பட்டு வந்த ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டு வந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதியினால்  அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்டிருந்தார்.

எனினும், தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ரெஜினோல்ட் குரே அடியோடு மறுத்திருந்த நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...