தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்த சஹாரா app!

பேஸ்புக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் ஒருமுறையேனும் தென்படும் சராஹா அப்டேட் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் சராஹா செயலி முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி அரேபியாவில் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த செயலி குறைந்த காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து வருகின்றனர்.

சராஹா செயலியில் முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கமெண்ட்களை பெற முடியும். இந்த செயலி மற்றவர்கள் (முகம்-தெரியாதவர்கள்) தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என செயலியை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயலியில் நீங்கள் உருவாக்கும் ப்ரோஃபைலினை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். சராஹாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல்களை பார்த்து, அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவர்கள் லாக் இன் செய்தாலும் மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ் மட்டுமே தெரியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது. நீங்கள் மெசேஜ் அனுப்பியர் செயலியை திறந்ததும் அவரது இன்பாக்ஸ்-இல் மெசேஜ் மட்டும் தெரியும்.

இவ்வாறு வரும் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும், அழிக்கவோ, பதில் அளிக்கவோ அல்லது அவற்றை ஃபேவரைட் என குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் மிக எளிமையாக கண்டறிய முடியும்.

அதிக டிரெண்ட் ஆகி வருவதால் இந்த செயலியின் பயன்பாட்டை மேம்படுத்த இதை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர். இதன் தனி நபர் பாதுகாப்பு அம்சங்களில் சர்ச் ரிசல்ட்களில் உங்களது பெயர் யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை குறைத்து வைக்க முடியும்.

மேலும் அங்கீகரிக்கப்படாத வாடிக்கையாளர்கள் உங்களது ப்ரோஃபைலை பயன்படுத்துவதை ஆஃப் செய்து வைக்க முடியும். இதனால் லாக் இன் செய்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு கமெண்ட் செய்ய முடியும். மேலும் பெயர் உள்ளவர்கள் மட்டுமே உங்களக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்ற வாக்கில் மற்றவர்களை பிளாக் செய்ய முடியும். இதனால் பெயரற்றவர்கள் மீண்டும் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாது.

இதே போன்ற வசதிகளை வழங்கும் பல்வேறு செயலிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. எனினும் இவற்றில் இக் யாக், சீக்ரெட் மற்றும் விஸ்பர் போன்ற செயலிகள் பிரபலமானதாக அறியப்படுகின்றது.

நமக்கு யார், எங்கிருந்து எதை வைத்து மெசேஜ் அனுப்புகிறார்கள் என்பதே தெரிந்து கொள்ள முடியாத மெசேஜிங் செயலி தற்சமயம் அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் சராஹா டவுன்லோடு செய்துள்ளனர்.

Comments
Loading...