தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் -இலங்கையை பாதிக்குமா?…

வங்கக் கடலில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது

எனினும் இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சூறாவளியாக உருமாற்றம் அடையுமா என்பது பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாதுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, அந்தமான் மற்றும் வங்கக் கடலில் எதிர்வரும் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையமும் உறுதி செய்துள்ளது.

அதோடு எதிர்வரும் 23ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை  இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படக்கூடியதாக இருக்குமா  என்பது பற்றி  கூற முடியாதுள்ளதாகவும் ,

இந்த தாழமுக்கம் இந்தியாவின் மேற்பகுதியூடாக நகர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...