தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வசதி குறைந்த வீட்டிற்கு குடிபெயரும் சம்பந்தன்…

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை, மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும்படி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதம் மூலம் இரா.சம்பந்தனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் வாசஸ்தலத்திலிருந்து இரா.சம்பந்தன் வெளியேறிவிடுவார் என தெரிகின்றது.

இந்நிலையில் சபாநாயகரின் கடிதத்திற்கு இரா.சம்பந்தன் தரப்பிலிருந்து ஆட்சேபணையெதுவும் தெரிவிக்கப்படவில்லையென் பிரதிசபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் வாசஸ்தலத்திற்கு மாறும்வரை, சிறிய அறை போன்ற அந்த வீட்டில் இரா.சம்பந்தன் வசிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...