தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கிலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்-ஆளுநர் சுரேன் ராகவன்… 

வட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என வடமாகாண  புதிய ஆளுநர் சுரேன் ராகவன்  தெரிவித்துள்ளார்.

வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகின்றார்.

அந்தவகையில் அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விகாராதிபதிகள் ஆளுநரிடம் எடுத்து கூறியுள்ளனர்.

குறிப்பாக இளைஞர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி  தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனுடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.

Comments
Loading...