தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆராய யாழ் சென்றுள்ளார் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்..

வடக்கில் தற்போது அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.

அவர்களுடன்  சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டாரவும் வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...