தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை…

வடக்கு மாகா­ணத்­தில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­க­ளின் தரத்தை பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும் என்று மாகா­ண­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றப்­பட்­டுள்­ளது.

தனது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஊடாக அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜி.குண­சீ­லன் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

ஆளும் கட்சி உறுப்­பி­னர் சபா.குக­தாஸ், வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் பிரே­ரணை சமர்­பித்­தார்.

வடக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்ட உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வின் தரம் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இர­சா­ய­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உண­வு­கள் சுவை­யூட்­டப்­ப­டு­ கின்­றமை, பாவித்த எண்­ணெய் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, உண­வு­கள் பழு­த­டை­யாது நீண்ட காலம் இருப்­ப­தற்கு எண்­ணெய்க்­குள் பிளாஸ்­ரிக் பயன்­ப­டுத்திப் பொரிக்­கின்­றமை, மாமிச உண­வு­கள் நீண்ட கால­மாக குளிர்­சா­த­னப் பெட்­டிக்­குள் வைக்­கப்­ப­டு­கின்­றமை, கொத்­து­ரொட்­டிக்கு இர­சா­ய­னம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, பழங்­க­ளில் இர­சா­ய­னம் கலந்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை போன்ற பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன.

இதன் காரணமாக  பொதுச்­சு­கா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக இது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று அவர் தனது பிரே­ர­ணை­யைச் சமர்­பித்­துக் கோரி­னார்.

வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்சி உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்­தார்.

 

Comments
Loading...