தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கில் முதன்முறையாக வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் பௌத்த மாநாடு ….

வடமாகாணத்தில்  முதன்முறையாக பௌத்த மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட மாகாண ஆளுநர்  சுரேன் ராகவனே குறித்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிய வருகிறது.

குறித்த மாநாடு  வவுனியா போதிதக்‌ஷணராமய விகாரையில் அடுத்த மாதம்-22 ஆம் திகதி  நடாத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடனும், படையினரின் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் வாழும் பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டுகொள்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமென வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் இதுவரை பௌத்த மாநாடு எதுவும் நடாத்தப்படாத நிலையில் பௌத்த மதம் பற்றிய ஆய்வுகள் பலவற்றை முன்னெடுத்து வந்த சுரேன் ராகவன் வடமாகாண  ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக  குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...