தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது ..

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் முன்று பேர்  வல்வெட்டித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வில் ஈடுபட முனைந்ததாகக் கூறியே  அவர்களை  வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின்  இல்லத்திற்கு முன்பாக பிறந்தநாள் நிகழ்வினைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதாகக் கூறியே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிவாஜிலிங்கம் பயணித்த ஆட்டோவினை வழிமறித்த  பொலிசார் ஆட்டோவினுள் பயணித்த மூவரைக் கெது செய்ததோடு அவர்களின் ஆட்டோவில் இருந்த கேக் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னராக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாகக் கூறிய பொலிசார் சிவாஜிலிங்கத்தையும் அவருடன் பயணித்த ஏனைய இருவரையும் விடுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்  தாயகம் உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் வெகு எழுச்சிகரமாகக் கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...