தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடசென்னை – விமர்சனம்..

 வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமீர். அவரின் விசுவாசிகளாக சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா நான்கு பேரும் வருகின்றனர்.
சமுத்திரக்கனி, கிஷோர், பவன் குமார், சாய் தீனா உள்ளிட்ட நான்கு பேரும் இணைந்து ஒரு  கொலையை செய்கின்றனர்.
ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொண்ட அமீர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார்.
இந்த நிலையில், வடசென்னை இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேரம் விளையாட்டு கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறார் அமீர்.
கேரம் விளையாட்டின் மீது அதீத ஈர்ப்பு கொண்ட சாதாரண வடசென்னை இளைஞன் தனுஷுக்கு (அன்பு) கேரம் விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அமீர் அவரை ஊக்கப்படுத்துகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் வாயாடி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தனுஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது. இருவருக்கும் இடையேயான மோதலே அவர்களுக்கு இடையே காதல் வர காரணமாகிறது.
எம்.ஜி.ஆர். இறக்கும் காலத்தில் நடக்கும் இந்த கதையில், வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்படுகிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த அமீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார்.
சமுத்திரக்கனியும், கிஷோரும் காசுக்கு ஆசைப்பட்டு, அமீர் விட்ட தொழிலை மீண்டும் கையில் எடுக்கின்றனர். இதனால் போலீசில் சிக்கும் அவர்களை அமீர் பொது இடத்தில் வைத்து அடித்துவிடுகிறார்.  தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்க சமுத்திரக்கனியும், கிஷோரும் சேர்ந்து திட்டமிடுகின்றனர்.
தொடர்புடைய பதிவு

இந்த நிலையில், சாய் தீனாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைக்கு பிறகு தனுஷின் கை ஓங்குகிறது.

கடைசியில், வடசென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமீரின் தலைமை என்ன ஆனது? தனுஷ் அந்த ஏரியாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? படத்தின் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டவர் யார்? சமுத்திரக்கனி, கிஷோர் என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தின் முடிவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுப்பர் ஹிட். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
Comments
Loading...