தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமாகாணசபையின் நியமனங்களிற்கான கடிதங்களை நானே கையளிக்கவேண்டும் – ஆளுநர் ரெஜினோல்ட் குரே..

வடமாகாணசபையின் நியமனங்களிற்கான கடிதங்களை தானே தன் கையால் கையளிக்கவேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திலுள்ள ஆளணி வெற்றிடங்கள் தற்போது வேக வேகமாக வடக்கு முதலமைச்சரது அறிவுறுத்தலிற்கு அமைய நிரப்பப்பட்டுவருகின்றது.
அவ்வாறு வழங்கப்படுகின்ற நியமனக்கடிதங்கள் முதலமைச்சராலேயே பணியாளர்களிற்கு வழங்கப்படுவது வழமையாகும்.
இந்நிலையில்  தற்போது  நியமனக்கடிதங்களை தான் வழங்கவேண்டுமென ஆளுநர் பணித்திருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை  இவ்வாறான நடவடிக்கைகளில் ஆளுநர் செயற்பட பின்புல தூண்டுதல்களே காரணமெனவும்  சொல்லப்படுகின்றது.
குறிப்பாக கூட்டமைப்பினை சேர்ந்த சிலர் ஆளுநரை தூண்டி விடுவதாலேயே, ஆளுநர்  இவ்வாறான பணிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...