தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிகள் கண்டுபிடிப்பு..

எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கெய்ரோவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் போது இந்த மம்மிகளில்  12 மம்மிக்கள் குழந்தைகளுடையவை  என்பது தெரியவந்துள்ளது.

லினென் துணியால் சுற்றப்பட்டும், மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டும் உள்ள  இந்த மம்மிகள் கி.மு. 30 முதல் கி.மு. 320ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.

இதேவேளை இந்த ஆண்டின் மிகப் பெரிய வரலாற்று ஆவணமாக இந்த மம்மிக்கள் இருக்கும் என்றும்,இது தொடர்பில்  தொடர்ந்து ஆய்வு நடந்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...