தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வறட்சி காரணமாக கிளிநொச்சியில் 21,959 பேர் பாதிப்பு…

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 21,959 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி  மாவட்டத்தின் 7 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு தினமும் 32,000 லீற்றர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 18,953 பேருக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை பிரதேச சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...