தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா,நெளுக்குளத்தில் வீதிக்கு வந்த 12 அடி முதலை….

வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த  முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா,நெளுக்குளத்தில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது, 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது, முதலையானது வீதியோரத்தில்இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

இதனையடுத்து  பொலிசாருக்கு  வழங்கப்பட்டதை அடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற  பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து, முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

Comments
Loading...