தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு

வவுனியா – பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா,  பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.

அதே இடத்தை  சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா மற்றும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இன்று காலை குறித்த குளத்தில்  இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார வேலி

குளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் க்தந்தையும் மகனும்  உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Comments
Loading...