தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா திரையரங்கில் அடிதடி – பலர் காயம்…

வவுனியா  வசந்தி திரையரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற அடிதடியில்   பலர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அடிதடியில்  ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்றையதினம்   வெளிவந்துள்ள “விஸ்வாசம்” படத்தை காண்பதற்காக இரவு  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுசீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு  அடிதடியாக மாறியுள்ளது.

இதனால் கண்டிவீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே  அங்கு சென்ற பொலிஸார் வாகனத்திற்குள்ளேயே இருந்துவிட்டு அப்படியே திரும்பிச்சென்றிருந்ததாக கூறப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...