தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா, மடுக்குளத்தில் தோட்டக் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு…

வவுனியா, மடுக்குளத்தில்  தோட்டக் காணியிலிருந்த  வெடிபொருட்கள்  பூவரசங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்கு  இன்று சிறுவன் ஒருவன் விளையாட சென்ற நிலையில் உரப்பொதியில் சுற்றிவைக்கபட்டு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து  தந்தைக்கு தெரியபடுத்தியுள்ளான்.

இதனை அடுத்து  அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் , குறித்த உரப்பொதியிலிருந்து ,  மூன்று கைக்குண்டுகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தபடும் ரவைகள், கோல்சர் என்பவற்றை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில்  மேலும் வெடிபொருட்கள் அங்கு இருக்கலாம என நினைத்த   பொலிசார்  விசேட அதிரடிப்படையினருக்கு  தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும்  பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த  கிராமத்தில் இருந்து அண்மையிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...