தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா – ரம்பைக்குளத்தில் ஒரே வீட்டில் கொலை மற்றும் தற்கொலை!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்க்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை இரண்டு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மகாறம்பைக்குளம் குட்டிநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய செல்வம் புஸ்பராணி மற்றும் அவருக்கு அறிமுகமான பியசேனகே எதிரிசிங்க என்ற இருவருமே சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் தடியினால் அடித்து கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெண்ணின் சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது அம்மம்மாவுடன் குறித்த நபர் சண்டையிட்ட பின்னர் தடியால் தாக்கியதாகவும் அதன் பின்னரே அவர் கழுத்தில் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டதாக நேற்று இரவு முழுவதும் சடலங்களுடன் வீட்டில் தங்கியிருந்த உயிரிழந்த பெண்ணின் பேரப்பிள்ளையான 5 வயது சிறுமி தெரிவித்துள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் மகாறம்பைக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Comments
Loading...