தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வாழைச்சேனையில் ஐவர் கைது…

மட்டக்களப்பு  வாழைச்சேனை – விபுலானந்தா வீதியில் 16 கிலோ கிராம  கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா , சாலியபுர , மதவாச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...