தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜய் இன் மகனிற்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா?

கோலிவுட்டில் பிரபல நடிகரான விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் அட்லியின் ‘மெர்சல்’.

தற்போது, ‘சர்கார்’ படம் திபாவளிக்கு  திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து விஜய்யின் 63-வது படத்தை அட்லி இயக்கவுள்ளார்.

இந்ந்த நிலையில் சமீபத்தில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி, நடித்துள்ள ‘ஜங்க்ஷன்’ என்ற குறும்படத்தின் டீசர் வெளியானது.

ஏற்கெனவே, ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜய்யுடன் சேர்ந்து சஞ்சய் நடனமாடியிருந்தார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் “விஜய்யை தவிர உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “தல (அஜித்) மற்றும் விஜய் சேதுபதி” என சஞ்சய் பதில் அளித்துள்ளார்.

மேலும், “தமிழில் எந்த பெரிய நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை?” என கேட்கப்பட்ட கேள்விக்கு “அப்பா (விஜய்), தல (அஜித்), விஜய் சேதுபதி” என பதில் அளித்துள்ளார் சஞ்சய்.

Comments
Loading...