தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்!

நடிகர், தயாரிப்பாளர் ஆகிய அவதாரங்களில் திரையுலகில் ஜொலித்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி தற்போது புதியதாக பாடகர் அவதாரமும் எடுத்துள்ளார். ஆம், யுவன்ஷங்கர் ராஜா இசையில் அவர் சமீபத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் உறவினர் ஹரிகிருஷ்ணன் என்பவர் நடிக்கும் படம் பேய்பசி. இந்த படத்திற்கு இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜா, ஒரு பாடலை கம்போஸ் செய்துவிட்டு அந்த பாடலை விஜய்சேதுபதியை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். இதுகுறித்து அவர் விஜய்சேதுபதியிடம் தெரிவித்தார்.

முதலில் தயங்கிய விஜய்சேதுபதி, பின்னர் யுவன் கொடுத்த தைரியத்தில் அந்த பாடலை பாடி முடித்தார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் கவிநயம் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...