தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில முல்லைத்தீவு பொலீசாரால் மீட்பு..

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில முல்லைத்தீவு பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது..
வட்டுவாகல் பகுதியில் தனி நபர் ஒருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் போது விடுதலைப்புலிகளின் வெடிபொருள் அங்கி ஒன்றும் அதனுடன் விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் தீர்வை சான்றும் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட தீர்வை சான்றில் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் கடை ஒன்றின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
வெடிபொருள் அங்கியில் இருந்து தமிழன் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ள கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு பொலீசார் முன்னிலையில் சிறப்பு அதிரடிப்படையினர்  குறித்த பொருட்களை  மீட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...