தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின்  படத்தை நெஞ்சில் சுமந்தபடி உயிரிழந்த வீரர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின்  படத்தை நெஞ்சில் சுமந்து விளையாடும்போதே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்துயுள்ளது.

தமிழகம்  இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள வெங்குளம் கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பில் 2 நாட்களாக கபாடி போட்டி நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெங்குளம், இராமநாதபுரம் அணிகள் மோதியுள்ளன.

இதன்போது  தமிழீழ தேசியதலைவர் ஏ.பிரபாகரன் அவர்களின் படம் பதித்த ரீசேட்டினை அணிந்து, வெங்குளம் அணியில் விளையாடிய  காட்டு கூடலூர்  சூர்யா,. திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை சக வீரர்கள் துரிதமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோதிலும் . சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மனமுடைந்த சக வீர்கள் மற்றும் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.

கபடி ஆடுகளத்திலேயே பிரபாகரனின் உருவப்படம் பொறித்த ரீசேட்டினை அணிந்த  திறமைமிக்க விளையாட்டு வீரனின் மரணம்  கிராம மக்களை  ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...