தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை- வீ. ஆனந்த சங்கரி…

 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் நேற்று  பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம் பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர் அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர் என்றும், குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என அவர்கள்மீது  குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் அது அவர் செய்தார் இவர் செய்தார் எனக்கு தெரியாது என பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை  என்றும், குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார் என்றும்,

இவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...