தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விண்வெளியில் சொகுசு ஹோட்டல்!!!!!

விண்வெளி பயணம் என்பது நம்மில் பலரும் எதிர்பார்ப்பது. ஆனால் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை அமைக்க ஓரியோன் ஸ்பேன் நிறுவனம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘ஸ்பேஸ் 2.0’ மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், வரும் 2021க்குள் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குவதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ஹோட்டலில் ஆறு பேர் 12 நாட்களுக்கு தங்க, ரூ.61 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் முன்பதிவுத் தொகையாக ரூ.51 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Comments
Loading...