தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு..

யாழ் புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட்  வழங்கியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளதாக  குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இதை  அடுத்து  ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில்  அவரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு  நீதிபது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...