தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விராட் கோலியை புகழும் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக்..

இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலக சூப்பர்ஸ்டார்  என ஆஸ்திரேலியாவின் முன்னாள்  வீரர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது.

இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இது குறித்து  ஸ்டீவ் வாக் கூறுகையில்,சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்றும்  விராட் கோலி உலகின் சூப்பர்ஸ்டார் என்றும் அவர்  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...