தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விரைவில் அருங்காட்சியகத்தில் விராட் கோலி சிலை …

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில்  திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

 இங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம்.

அந்தவகையில் குறித்த  அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கும் அங்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...