தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விவசாயப் பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ..

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற நிகழ்வில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதில் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்  பதவியேற்றுள்ளனர்.

இவர்களில அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மற்றையவர்கள்   ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவார்.

இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ள் நிலையில் பிரதி அமைச்சர்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் அங்கஜன் இராமநாதன் விவசாயப் பிரதி அமைச்சராகவும், அஜித் மன்னம்பெரும சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்ராகவும், காதர் மஸ்தான் மீள்குடியேற்றப் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி இந்து சமய விவகார பிரதி அமைச்சராகவும், எட்வேர்ட் குணசேகர உள்நாட்டு விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்திப் பிரதி அமைச்சராகவும், நளின் பண்டார பொது நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராக, பௌத்தரான ரஞ்சித் அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...