தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா!

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்ததாக தாய்லாந்தில் ஒர மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ஜீவா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் தாய்லாந்து செல்லவிருக்கின்றனர். அங்கு சுமார் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் `காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Comments
Loading...