தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா கடற்படை மீது தமிழக மீனவர்கள் தாக்குதல்? கடற்படை சிப்பாய் மாயம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 55 தமிழக  மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரை தமிழக மீனவர்கள் கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற நாகபட்டிணத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 9 மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று காங்கேசன்துறை கடற்படைமுகாமில் விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே ஊர்காவற்துறை கடற்பரப்பில் 11 விசைப் படகுகளையும் அவற்றிலிருந்த 44 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதே வேளை கடற்படை வீரர் ஒருவரை தமிழக மீனவர்கள் கடத்தி சென்றதாகவும் குறித்த படகை இலங்கை மற்றும் இந்திய கடற்படை சுற்றிவளைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..

நேற்றிரவு இலங்கை கடற்படையினருக்கும், இந்திய மீனவா்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடா்ந்து இலங்கை கடற்படை வீரா் ஒருவா் காணாமல் போயுள்ளாா்.

இ்ந்நிலையில் காணாமல் போன் இலங்கை கடற்படை வீரா் இந்திய மீனவா்களின் படகில் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டு தேடுதலை நடவடிக்கை இடம்பெறுகின்றது.

Comments
Loading...