தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ அதிரடிப்படை மீது கல்வீச்சு!

பசறை, எல்டெபிவத்தை தோட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட ஆகரதென்ன பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது, பிரதேச மக்கள் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து, பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட தோட்ட மக்கள் அதரடிப் படையினர்மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனரென, பாதிக்கப்பட்ட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.

Comments
Loading...