தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஹாமில்டனில் இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி…

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர்தவான் ஆகியோர் ரன்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.க்ருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் நியூசிலாந்து அணியும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...