தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

​முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் பல்கலை மாணவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

 

 முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன

இந்நிலையில்  பல்கலைக்கழக மாணவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை சற்றுமுன் நிகழ்த்தியுள்ளனர்

அவர்கள் அங்கு கருத்து தெரிவிக்கையில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து , கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வந்துள்ளோம்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள்  பேரெளிச்சியுடன் நடைபெறவுள்ளது

இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்புக்களுக்கும் பல்கலைக்களக மாணவர் ஒன்றியம் சார்பில் நன்றிகளை தெரிவித்து நிக்கின்றோம்

அதோடு  எதிர்வரும் 18 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய உந்துருளி பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும்.

பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகிற்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.

அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் இதேவேளை இன்னும் ஒரு விடயத்தினை நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

யாரும் எதிர்பாக்காத வகையில் தாயகமண்ணில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒற்றுமையான ஒரு நிகழ்வாக வரலாற்றினை பதிக உள்ளது.

அந்தவகையில் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற ஈழத்து உறவுகளுக்கு அன்புரிமையான வேண்டுதலை விடுக்கின்றோம்.

தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நிiiவு நிகழ்வினை நடத்துகின்றோமோ அதேபோல் நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் அனைத்து பேதங்களையும் மறந்து ஈழத்தமிழர்கள் உன்றரீதியில் நீங்கள் வாழுகின்ற நாட்டில் இருக்கின்ற இலங்கை தூதரகத்திற்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்திற்கு முன்பாக சென்று ஒரே நினைவேந்தலை செய்வதன் ஊடாக அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஜ.நா சபைக்கு கொண்டு செல்லமுடியும்.

இதன் ஊடாஅக எங்கள் உரிமையினை பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்  என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன் இதன்போது மேலும்  தெரிவித்துள்ளார். 

Comments
Loading...