Designed by Iniyas LTD
கூட்டமைப்பின் தலைவரை சந்தித்துள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்கள்…
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அரசியல் குழப்ப நிலையை அடுத்து முக்கிய அரசியல் தலைமைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.