தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

10000 ரன்கள் எடுத்து உலக  அளவில் 13-வது வீரர் எனும் பெருமையை பெற்ற தோனி….

முதலாவது ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர் மகேந்திர சிங்  தோனி  10000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.

10 ஆயிரம் ரன்களை  ஒருநாள் போட்டியில் அடைவதற்கு இந்திய வீரர் மகேந்திர சிங்  தோனிக்கு ஒரு ரன் குறைவாக இருந்தது.

இந்நிலையில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  10000 ரன்களை எட்டியதால்  உலக  அளவில் 13-வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர்  தோனி ஆவார்.

இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட்,விராட்  கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை எட்டியமை   குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...