தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையை உன்னிப்பாக கவனிக்கும் ஐ.நா…

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து அங்கு  என்ன நடக்கிறது என கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

இதனை  ஊடகங்களிடம்  ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு  பதிலளித்த அவர், இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது  எனவும், .

வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என தாங்கள் நம்புவதாகவும், கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...