தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

16 வகையான நோய்களுக்கு அருமருந்தாகும் சீத்தாப் பழம்..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்   சர்வ ரோக நிவாரணியாக சீத்தாப்பழம் உள்ளது

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்.

உடல் சூட்டை தணிக்க கூடியதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதும், ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், உடல் எடையை அதிகரிக்க கூடியதும் தான் சீத்தா பழம்.

இதனுடைய இலை, விதைகள் மருந்தாக பயன்படுகிறது. இது பேதியை நிறுத்தக் கூடியது.

ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்ட சீத்தாபழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. கிருமி நாசினியாக விளங்குகிறது.

சீத்தா மரத்தின் இலைகளை சுமார் 5 எடுத்து துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு நேரத்தில் 50 மில்லி அளவுக்கு வாரம் ஒருமுறை என 3 வாரம் குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றும்.

சீத்தா மரத்தின் இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் தைலம் தயாரிக்கலாம்.

பல்வேறு நன்மைகளை கொண்ட சீத்தா பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதில், கால்சியம், இரும்பு சத்துகளும் உள்ளன.

டைபாய்டு காய்ச்சல் வந்தவர்கள் அன்றாடம் ஒன்றிரண்டு பழத்தை சாப்பிட்டால் நல்ல சத்துக்கள் கிடைக்கும். காசநோயாளிகள் சத்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டியிருப்பதால், சீத்தாபழத்தை சாப்பிட்டுவரலாம். டைபாய்டு, காசநோயை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

அல்சரை வெகு சீக்கிரத்தில் குணப்படுத்தும். சீத்தா பழத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது.

ரத்த அழுத்தம் குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தத்தை துரிதமாக செலுத்துகிறது. சீத்தாபழம் உச்சி முதல் பாதம் வரை நமக்கு நன்மை தருகிறது. எலும்பு, பற்களுக்கு பலத்தை கொடுக்கிறது. சீத்தா பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்துவர நல்ல வளர்ச்சி இருக்கும்.

 

Comments
Loading...