தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடைய கொரில்லா மரணம்..

 

அமெரிக்காவில் மனிதர்களுடன் சைகை மூலம் உரையாடி பிரபலமடைந்த கொரில்லா குரங்கு, தனது 46வது வயதில் இறந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில், 1971ஆம் ஆண்டில் பிறந்த கோகோ என்ற பெயருடைய கொரில்லா குரங்கு, மிக விரைவிலேயே மனிதர்களின் மொழியை புரிந்து கொள்ளும் திறன் உடையதாக இருந்தது.
மேலும், தனது கருத்தையும், அது சைகை மூலம் வெளிப்படுத்தியதால், பிரபலமடைந்தது.

சுமார் 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளும் திறனுடையதாக இருந்த அந்த கொரில்லா குரங்கு தற்பொழுது  தனது 46வது வயதில் உயிரிழந்தமை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...