தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

2009 இல்  நடைபெற்றது  இனப்படுகொலை என பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன்விரும்பிகள், அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்-சி வி விக்னேஸ்வரன்..

 

2009 இல்  நடைபெற்றது  இனப்படுகொலை என வடமாகாண சபை தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது என்னைப்பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம்தான் இது சட்டரீதியானதாக கொண்டுவரவில்லை.

இது தான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டுவந்தேன் சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன்விரும்பிகள், அமைப்புக்கள் அவர்கள் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சி வி விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள்  கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட  130 மாணவர்களுக்கு  மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன

புலம்பெயர் தமிழ் மக்களது நிதி பங்களிப்பில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன நிகழ்வில் தமிழ் மக்கள்  கூட்டணியின் ஸ்தாபகரும் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இங்கு நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் 2009 இல்  நடைபெற்றது  இனப்படுகொலை என தெரிவித்து  வடமாகாண சபை தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள  நடவடிக்கை என்ன. என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இது தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்டவர்கள் தான் செய்யவேண்டும் உண்மையில் அவர்கள் அவர்கள் செய்யவேண்டியதைதான் நான் வடமாகாணசபையில் செய்யவேண்டியதாக இருந்துள்ளது.

இதனை நாங்கள் எல்லோரும் ஒருமித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிந்திக்கவேண்டும் என்னைப்பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம்தான் இது சட்டரீதியானதாக கொண்டுவரவில்லை இது தான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டுவந்தேன்

சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன்விரும்பிகள், அமைப்புக்கள் அவர்கள் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Comments
Loading...