தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

3 வேளை வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டால்: என்ன நடக்கும்?

அரிசி, கோதுமை போன்ற தானிய வகை உணவிற்கு அடுத்தபடியாக நம்மில் அதிகம் பலரால் சாப்பிடப்படும் உணவாக வாழைப்பழம் உள்ளது.வாழைப்பழத்தில் அதிக நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளது. அதனால் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது, வழக்கமாக சாப்பிடும் உணவுகளை தவிர்த்து வெறும் வாழைப்பழத்தை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.ஆனால், அதுவே அன்றாட உணவுடன் வாழைப்பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு உங்களுக்கு நிறைவாக எவ்வளவு வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதோ அத்தனை வாழைப்பழங்களையும் சாப்பிடலாம்.

தொடர்புடைய பதிவு

வாழைப்பழத்துடன் எதை சேர்த்து சாப்பிடலாம்?

வாழைப்பழத்துடன் பச்சை கீரை வகைகளை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதை தவிர டீ, பால், காபி போன்ற பானங்கள் மற்றும் மற்ற உணவுகள் எதையுமே சாப்பிடக் கூடாது.

வாழைப்பழ டயட்டில் பின்பற்ற வேண்டியவை?

வாழைப்பழ டயட்டை மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

வாழைப்பழத்தில் பெக்டின் எனும் வேதிப்பொருள் உள்ளதால், வாழைப்பழம் சாப்பிட்டு பல மணிநேரங்களுக்கு பசி உணர்வு எடுக்காது. இந்த டயட்டை தொடர்ந்து சில வாரங்கள் பின்பற்றி வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

Loading...