தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

360 டிகிரி வரை பந்தை பவ்வியமாக சுழற்றும் வீரர் – ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

360 டிகிரி கோணத்தில் பந்தை சும்மா சுழற்றி எடுத்த வீரர் நடுவரையும், ரசிகர்களையும்,கிரிக்கெட் வட்டாரத்தையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் உத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் .

இவர்  360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது

.சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் ,23 வயதுக்குட்பட்டோருக்கான நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் – 1 போட்டியில் பெங்கால் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டியில்தான் தனது வித்தியாசமான  ஆக்‌ஷன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஷிவா சிங்   கவர்ந்துள்ளார்.

ஷிவா சிங்  சற்று மாறுபட்டு வித்தியாசமாகப் பந்துவீசியதை  தடுத்து ஆட ரெடியான பேட்ஸ்மேனும்,ரசிகர்களும்,கிரிக்கெட் வர்னையாளர்களும் பார்த்துக்கொண்டிரும் போதே இதை `டெட் பால்’ என அறிவித்தார் கள நடுவர்.

இதுவரை கிரிக்கெட் உலகிலும் சரி கிரிக்கெட் போட்டிகளிலும் சரி 360 டிகிரியை கையாண்டது இல்லை.மேலும் வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்ட பவுலர்கள் கிரிக்கெட் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் இதுவரை 360 டிகிரியில் சுற்றி யாரும் பந்து வீசியிருக்க மாட்டார்கள்.அப்படி ஒருவரை கிரிக்கெட் உலகம் கண்டதில்லை என்ற நிகழ்வை தனது 360 டிகிரியை கொண்டே அழித்துள்ளார் .ஷிவா சிங்க்.

இந்ந்த நிலையில் பேட்ஸ்மேன்களை மிரட்டிய இந்த 360 டிகிரி கிரிக்கெட்டின் முத்தாக ஷிவா சிங்  எதிர்காலத்தில் ஜோலிப்பார் என  கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...