தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த பாறை நிலவில் கண்டுபிடிப்பு…

400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த பாறை நிலவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா விஞ்ஞானிகள் அப்பல்லோ திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த  1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  நிலவுக்கு பயணித்து 33 மணிநேரம் வரை நிலவில் செலவிட்ட அப்போலோ 14 விண்கல விஞ்ஞானிகள், சுமார் 43 கிலோ எடை கொண்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அந்த விண்கல்லை தொடர்ந்து  விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பாறை சுமார் நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பாறை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்  பூமியும் , சந்திரன் மோதும் போது சந்திரனில் விழுந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...