தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

552 காரட் எடையுள்ள மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு….

உலகில் பெரிய வைரங்களில் ஒன்றான மஞ்சள் வைரம் அமெரிக்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

முட்டை அளவில் காணப்படும்  552 காரட் எடை கொண்ட இந்த பட்டை தீட்டப்படாத வைரம் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுகின்றது.

உலகில் உள்ள மிகப் பெரிய பட்டை தீட்டப்படாத வைரங்களில் 25வது இடத்தில் இந்த வைரக்கல் இடம் பெற்றுள்ளது.

பிலிப்ஸ் என்ற ஏலநிறுவனத்திடம் இருக்கும் மஞ்சள் வைரத்தின் விலை தற்போது தெரியவில்லை என்று குறிப்பிட்ட ஏலநிறுவன நிர்வாகி, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் யோசனை பெற்ற பின்னரே அதனை பட்டை தீட்டவும், ஏலத்தில் விட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...