தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் நுண்கடனை ஐ.நாவின் கடுமையான அழுத்ததினால் இலங்கை அரசு தள்ளுபடி செய்கிறது

ஐ.நாவின் கடுமையான அழுத்தம், 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் நுண்கடனை தள்ளுபடி செய்கிறது அரசு..”நுண்கடன் பெண்ண 700 பெண் தலமைத்துவ குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்யப்படவுள்ளது. இதற்கான சான்றிதழ் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வைத்து நிதியமைச்சா் மங்கள சமரவீரவினால் வழங்கப்படவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் நுண் நிதிக்கடன் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் முன்வைத்துள்ள அறிக்கை விவாதிக்கப்படவுள்ள நிலையில் இந்தச் செயற்பாடு அர சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் அதிகளவில் நுண்நிதிக் கடன்கள் பெறப்பட்டன. பெண் தலைமைத்துவக் குடும்பங்களால் அவை அதிகளவில் பெற்றுக்கொள்ளப்பட்டன. நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் பலர் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழந்தனர். நுண்நிதிக் கடன்களை வசூலிக்கச் செல்வோர் வரம்பு மீறிச் செயற்பட்டதுடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் பாலியல் லஞ்சமும் கோரப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நுண்நிதிக் கடன்களை தள்ளுபடி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கைச் சேர்ந்த 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நுண்நிதிக் கடனைத் தள்ளுபடி செய்தமைக்கான சான்றிதழ், நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறும் நிகழ்வில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

Comments
Loading...